திசையன்விளை:
திசையன்விளை பேரூராட்சியில் ஒப்பந்த தொழிலாளர்களாக களக்காட்டை சேர்ந்தவர்கள் பணி செய்துவருகிறார்கள்.
அவர்களை 8 மணி நேரத்திற்கு மேலாக பணி செய்ய வலியுறுத்துவதாகவும், நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குபதிவிற்கு செல்லகூட அனுமதி வழங்கவில்லை என கூறியும், பணியாளர்கள் சம்பள பணத்தை 10-ந்தேதிக்குள் வழங்க கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை சி.ஐ.டி.யு. சங்க நெல்லை மாவட்ட செயலாளர் மோகன் தலைமையில் பேரூராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்து அங்கு வந்த திசையன்விளை சப்& இன்ஸ்பெக்டர் லிபி பால்ராஜ், சுகாதார ஆய்வாளர் நவராஜ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பணியாளர்கள் பணிக்கு சென்றனர்.