நெல்லை சந்திப்பு பகுதியில் சுற்றித்திரிந்த நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்த காட்சி. 
உள்ளூர் செய்திகள்

நெல்லை மாநகர பகுதியில் சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களுக்கு கருத்தடை

நெல்லை மாநகர பகுதியில் சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து கருத்தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

நெல்லை மாநகர பகுதியில் ஏராளமான இடங்களில் தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிப்படைவதாக புகார்கள் வந்தது.

இதையடுத்து மாநகராட்சி கமிஷனர் விஷ்ணு சந்திரன் உத்தரவின்பேரில் மாநகரப் பகுதி முழுவதும் நாய்களை பிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாய்கள் பிடிக்கப்பட்டன.

இந்நிலையில் இன்று சந்திப்பு பகுதியில் நாய் பிடிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 சுகாதார ஆய்வாளர்கள் முன்னி லையில் மதுரையை சேர்ந்த நாய் பிடிக்கும் தனியார் அமைப்பை சேர்ந்த ஊழியர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் நாய்களை வலைவீசி பிடித்தனர்.