தச்சநல்லூர் செல்வ விக்னேஷ் நகரில் வீடு, வீடாக சென்று மாநகராட்சி ஊழியர்கள் பூத் சிலிப் வழங்கிய காட்சி. 
உள்ளூர் செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் வீடு வீடாக சென்று பூத் சிலிப் வினியோகம்

நெல்லை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வீடு வீடாக சென்று வினியோகம் செய்யும் பணி தொடங்கியது.

மாலை மலர்

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

நெல்லை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளுக்கும், 3 நகராட்சியில் உள்ள 69-வார்டுகளுக்கும், 17 பேரூராட்சியில் உள்ள வார்டுகளுக்கும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது.

இதற்காக வாக்குச் சீட்டுக்கள் அச்சிடும் பணி நடந்து முடிந்துள்ளது. வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்குச்சீட்டு பொருத்தும் பணிகள் கடந்த இரண்டு நாட்களாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் தேர்தலை அமைதியாக நடத்த வீடுவீடாகச் சென்று பூத் சிலிப் விநியோகிக்கும் பணி  தொடங்கியது.

இதுபோல நகராட்சி பேரூராட்சி பகுதிகளிலும் அந்தந்த பகுதி உள்ளாட்சி ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று பூத் சிலிப் வழங்கும் பணியை மேற்கொண்டனர்.