வண்ணார்பேட்டை வளையாபதி தெருவில் பூத் சிலிப் வழங்கும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி ஊழியர்கள். 
உள்ளூர் செய்திகள்

நெல்லை மாநகராட்சியில் வீடு, வீடாக பூத் சிலிப்புகள் வினியோகிக்கும் பணி மும்முரம்

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை நடக்கிறது. இதையொட்டி நெல்லை மாநகராட்சியில் வீடு, வீடாக பூத் சிலிப்புகள் வினியோகிக்கும் பணி மும்முரம் நடைபெற்றது.

மாலை மலர்

நெல்லை:

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 21 மாநகராட்சிகளில் நாளை நடக்கிறது. நெல்லை மாவட்டத்திலும் தேர்தலை யொட்டி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். மாநகர பகுதியில் 4 மண்டலங்களிலும் மாநகராட்சி ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று பூத் சிலிப் வழங்கி வருகின்றனர். ஒரு வார்டுக்கு 3 பேர் கொண்ட குழுக்கள் நியமிக்கப்பட்டு பூத் சிலிப் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

ஒரு சில இடங்களில் அரசியல் கட்சியினரும் பூத் ஸ்லிப் வழங்கி வருகின்றனர். தேர்தல் ஆணையம் பூத் சிலிப் இல்லாதவர்கள் டிரைவிங் லைசென்ஸ், ஆதார் கார்டு உள்ளிட்ட 13 வகையான ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

ஆனாலும் அதிகாரிகள் தரப்பிலிருந்து பூத் சிலிப் வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒரு சில வார்டுகளில் பூத் சிலிப் எங்களுக்கு வரவில்லை என்று வினியோகம் செய்யும் ஊழியர்களிடம் கேள்வி கேட்டு வருகின்றனர்.

அதற்கு அவர்கள் பூத் சிலிப் இல்லாதவர்கள் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 13 வகையான ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் என்று அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.