வள்ளியூர்:
வள்ளியூர் அய்யா வைகுண்டர் வளர்பதியில் 12-ஆம் ஆண்டு மாசி திருவிழா வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது.
நேற்று காலை பணிவிடையும் உச்சிபடிப்பு மற்றும் பால்தர்மமும் மாலையில் சுவாமிதோப்பில் இருந்து, முந்திரி, பதம் மற்றும் கடம்பன்குளத்திலிருந்து திருஏடு எடுத்துவருதல் நம்பியான் விளையில் இருந்து மேளதாளம் முழங்க பதியை வந்தடைந்தது.
இரவு அன்னதானம், அகில உலக அய்யாவழி சேவை அமைப்பு மூலம் சிறுமியர் கருத்தரங்கம் நடைபெற்றது. இன்று இரவு7 மணிக்கு அய்யா வழி அருளிசை வழிபாடுசிவசந்திரன் தலைமையில் நடைபெறுகிறது.
இரவு அன்னதர்மம் வழங்கப்படுகிறது. ஞாயிற்று கிழமை மாலை 4 மணிக்கு அய்யா இந்திர வாகனத்தில் பவனி வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
3 நாட்களும் இரவு 8 மணிக்கு அன்னதர்மம் நடைபெறும். நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை வள்ளியூர் அய்யா வைகுண்டர் வளர்பதி அன்பு கொடி மக்கள் செய்துள்ளனர்.