கோப்புப்படம் 
உள்ளூர் செய்திகள்

நெல்லை மாநகராட்சி மேயர் பதவியை நாடாருக்கு ஒதுக்க வேண்டும்-தட்சணமாற நாடார் சங்கம் கோரிக்கை

நெல்லை மாநகராட்சி மேயர் பதவியை நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு வழங்கவேண்டும் என தட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே. காளிதாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நெல்லை:

நெல்லை தட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன் நாடார், செயலாளர் ஆர்.சண்முகவேல் நாடார் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. மகத்தான வெற்றி பெற்றுள்ளது.  நெல்லை மாநகராட்சியில் தி.மு.க. மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.  

நெல்லை மாநகராட்சியில் நாடார் சமுதாய மக்கள் கணிசமான அளவில் வசித்து வருகிறார்கள்.  பாளை தொகுதியில் நாடார் சமுதாயத்தை சேர்ந்த ஓட்டுகள் தான் அதிகம்.  

இதுவரை நெல்லை மாநகராட்சியில் மேயர் பதவியை நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் வகிக்கவில்லை.  

தற்போது இங்கு நாடார் கவுன்சிலர்கள் அதிகளவில் வெற்றி பெற்றுள்ளார்கள்.  தற்போது நெல்லை மாநகராட்சி மேயர் பதவியை நாடார் சமுதாயத்தை சேர்ந்தவருக்கு வழங்கினால், நாடார் சமுதாய மக்கள் பெரிதும் மகிழ்ச்சியடைவார்கள்.

ஆகவே இந்த முறை நாடார் சமுதாயத்தை சேர்ந்தவருக்கு மேயர் பதவி வழங்க வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT