கோப்புப்படம் 
உள்ளூர் செய்திகள்

நெல்லை மாநகரில் கஞ்சா விற்ற 6 பேர் கைது

நெல்லை மாநகரில் கஞ்சா விற்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை:

நெல்லை மாநகர  போலீஸ் கமிஷனர் துரைக்குமார் உத்தரவின் பேரில் மாநகர பகுதிகளில் கஞ்சா விற்பனையை முற்றிலும் தடுக்கும் வகையில் நேற்று  அதிரடி சோதனை நடந்தது.

குறிப்பாக பாளை, வண்ணார் பேட்டை, மேலப்பாளையம், டவுன், குறிச்சி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 6 பேரை  போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள்  சமாதானபுரம் சேர்ந்த செல்வகுமார் (வயது 23),  சந்திப்பு உடையார்பட்டியை சேர்ந்த பெரியசாமி (61), மேலப்பாளையம் கணேசபுரத்தை சேர்ந்த சையத்அலி (26), ஷேக் முகம்மது சையத் (23), சந்திப்பு மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த அய்யப்பன் (58), டவுன் சாலியர் தெருவை சேர்ந்த முருகராஜ் (22) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இவர்களிடமிருந்து மொத்தம் 450 கிராம்

கஞ்சா பொட்டலங்கள், ரூ. 7,670,- மற்றும் இருசக்கர வாகனம் 1 ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT