விபத்துக்குள்ளான கார். 
உள்ளூர் செய்திகள்

முக்கூடல் அருகே மரத்தில் கார் மோதி டிரைவர் உள்பட 3 பேர் படுகாயம்

முக்கூடல் அருகே இன்று அதிகாலை மரத்தில் கார் மோதிய விபத்தில் டிரைவர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

மாலை மலர்

முக்கூடல்:

புளியங்குடி சிந்தாமணி நயினார் தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 40). செங்கோட்டை கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பையா (78).

இவர்கள் 2 பேரும் ஒரு காரில் நெல்லைக்கு சென்றுள் ளனர். காரை தென்காசி சேவியர் காலனியை சேர்ந்த சேகர் (39) ஓட்டி வந்தார். இன்று அதிகாலை 3 மணி அளவில் அவர்கள் முக் கூடல் வழியாக காரில் ஊருக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.

முக்கூடல் அரிராம்நகர் அருகே சென்றபோது எதிர் பாராதவிதமாக கார் கட்டுப் பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதியது. இந்த விபத்தில் மகேந்திரன், சுப்பையா ஆகியோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அதிகாலை நேரம் என்பதால் அங்கு மக்கள் நடமாட்டம் இல்லை. சுமார் 2 மணி நேரம் கழித்து அந்த வழியாக சென்ற வர்கள் பார்த்து முக்கூடல் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் காரில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டி ருந்த 3 பேரையும் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காரில் இருந்த ஆவணங்களில் செல்போன் எண்கள் இருந்தது.

ஆனால் அந்த எண்ணில் தொ டர்பு கொள்ள முடியவில்லை. விபத்தில் சிக்கியவர்கள் எதற்காக நெல்லை வந்தார்கள்?  விபத்து நடந்தது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.