கோப்புப்படம் 
உள்ளூர் செய்திகள்

செம்மண் கடத்திய 3 பேர் கைது

நெல்லையில் செம்மண் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மாலை மலர்

நெல்லை:

நெல்லை மாநகரில் மணல் கடத்தப்படுவதாக போலீ சாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் தனிப்படை சப்- இன்ஸ்பெக்டர் காசிப் பாண்டியன், பெருமாள்புரம் சப்- இன்ஸ்பெக்டர் நயினார் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். 

வி.எம்.சத்திரம் அருகே உள்ள வ.உ.சி. நகரில் ஒரு லாரி மற்றும் அவர்களுடன் வந்த ஒரு மோட்டார் சைக்கிளை மடக்கி பரிசோதனை செய்தனர்.

அப்போது லாரியில் 6 டன் செம்மண் அனுமதியின்றி கடத்தி செல்லப்பட்டது தெரியவந்தது. உடனடியாக லாரியை பறிமுதல் செய்து பெருமாள்புரம் போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். 

அதில் அவர்கள் நடுவக்குறிச்சியை சேர்ந்த சின்னத்துரை (வயது36) வசவப்பபுரத்தை சேர்ந்த சங்கர் (28), பாளையை சேர்ந்த மாதவன் (38) என்பது தெரியவந்தது.  

இதைத்தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் மோட்டார் சைக்கிள் மற்றும் 4 செல் போன்களை பறிமுதல் செய்தனர்.