2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள். 
உள்ளூர் செய்திகள்

பாளையில் 200 குடும்பத்தினர் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்

பாளையில் புதிதாக வீடுகள் கட்டித்தரக்கோரி 200 குடும்பத்தினர் இன்று 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாலை மலர்

நெல்லை:

பாளை மனகாவலம் பிள்ளை நகர் அம்பேத்கார் காலனியில் வீட்டு வசதி வாரியம் சார்பில் குடியிருப்புகள் உள்ளது.

பழுதடைந்த இந்த கட்டிங்களை இடித்து விட்டு புதிதாக கட்டக்கோரி அப்பகுதியினர் கோரிக்கை வைத்தனர்.

இதைத்தொடர்ந்து இந்த பகுதி குடியிருப்புகளை இடித்து விட்டு 5 தளங்களுடன் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட திட்ட மிடப்பட்டுள்ளது. அதில் 408 வீடுகள் கட்டப் படும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் அதை பகுதியில் வசிக்கும் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்களுக்கும் அதே பகுதியில் புதிய வீடுகள் கட்டித்தர வேண் டும் என வலியுறுத்தி நேற்று அந்த பகுதியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோரிக்கையை நிறை வேற்றாவிட்டால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கப்போவதாக கூறினர். அவர்களுடன் தாசில்தார் ஆவுடையப்பன் மற்றும் போலீசார், வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது தேர்தல் முடிந்ததும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதைத்தொடர்ந்து இன்று அவர்கள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட் டத்தை தொடர்ந்தனர். பொது மக்களுடன் அப்பகுதியை சேர்ந்த தூய்மை பணியாளர்களும் இன்று பணிக்கு செல்லாமல் போ ராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.