கோப்புப்படம் 
உள்ளூர் செய்திகள்

நெல்லை மாநகராட்சியில் 5, 12-வது வார்டுகளுக்கு தி.மு.க. வேட்பாளர்கள் மாற்றம்

நெல்லை மாநகராட்சியில் தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த 2 வேட்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

மாலை மலர்

நெல்லை:

நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. 48 வார்டுகளிலும், காங்கிரஸ் 3 வார்டுகளிலும், கூட்டணி கட்சிகள் 4 வார்டுகளிலும் போட்டியிடுகின்றன.

தி.மு.க. தலைமை கழகம் சார்பாக 48 வார்டுகளிலும் போட்டியிடும் தி.மு.க. வேட் பாளர்கள் பட்டியல் நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நெல்லை மாநகராட்சி 5-வது வார்டு மற்றும் 12 வது வார்டில் தி.மு.க. வேட்பாளர்களை மாற்றி புதிய வேட் பாளர் களை அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரை முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நெல்லை மத்திய மாவட்டம் நெல்லை மாநகராட்சி 5-வது வார்டு வேட் பாளராக அறிவிக்கப்பட்ட பால முருகன் என்ற பிரபுவுக்கு பதிலாக  வி.ஜெகநாதன் 5-வது வார்டு வேட்பாளராக அறிவிக் கப்பட்டுள்ளார்.

இதுபோல நெல்லை மாநகராட்சி 12- வது வார்டு வேட்பாளராக  அறிவிக்கப் பட்ட மாலாவுக்கு  பதிலாக  எஸ்.வி.சுரேஷ் என்பவரது மனைவி கோகுலவாணி 12-வது வார்டு வேட் பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே சங்கர்நகர் பேரூராட்சியில்  அறிவிக்கப்பட்டிருந்த 2 வேட்பாளர்கள் நேற்று மாற்றப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் தற்போது மாநகராட்சியில் 2 வேட்பாளர்கள் மாற்றம்  செய்யப்பட்டுள்ளனர்.