கோப்புபடம். 
உள்ளூர் செய்திகள்

மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து மணிமுத்தாறு அருவியில் குளிக்க இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நெல்லை:

நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்கு தொடர்ச்சி மலை முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவி மாவட்டத்தில் உள்ள பிரதான அருவிகளில் ஒன்றாகும்.

இந்த அருவியில் குளித்து மகிழ தமிழகம் மட்டும் அல்லாமல் வெளிமாநில சுற்றுலா பயணிகளும் வருவார்கள். கொரோனா பரவல் காரண மாக கடந்த 2 ஆண்டுகளாக அருவியில் குளிக்க தடை விதிக்கப் பட்டிருந் தது.

இந்நிலையில் தொற்று குறைந்ததையடுத்து கடந்த மாதம் 6-ந் தேதி முதல் மீண்டும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஏராள மானோர் மணிமுத்தாறு அருவியில் குளித்து வந்தனர்.

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையின் காரணமாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

தற்போது வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டது.

இதனால் இன்று காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குளித்து வருகின்றனர்.

அருவிக்கு செல்ல மோட்டார் சைக்கிள் மற்றும் ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

SCROLL FOR NEXT