நெல்லை:
தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் ஒரே கட்டமாக நடக்கிறது. நெல்லை, தென்காசி மாவட்டங்களிலும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட 1,35,174 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து இன்று வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக மக்கள் அதிகம் கூடும் இடங்களான ரெயில், பஸ் நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு தலைமை மருத்துவமனை என 918 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு சொட்டு மருந்து முகாம் வழங்கப்பட்டு வருகிறது.
நெல்லை மாநகர பகுதியில் 108 இடங்களில் சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. பணகுடி அரசு ஆஸ்பத்திரியில் சபாநாயகர் அப்பாவு சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார்.
இதில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ், மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் கிருஷ்ண லீலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பாளை பஸ் நிலையம் அருகே உள்ள நகர்நல ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமினை அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
இதில் மாநகர நல அலுவலர் டாக்டர் ராஜேந் திரன் , உலக சுகாதார நிறுவனத்தின் கண்காணிப்பு அலுவலர் பால கணேஷ் குமார் மற்றும் சுகாதார பணி யாளர்கள் கலந்து கொண்ட னர். நெல்லை ஹைகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் டீன் ரவிச்சந்திரன் சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார்.