களக்காடு:
களக்காடு அருகே உள்ள கீழதேவநல்லூர் மணிமுத்தாறு கால்வாயில் பெண்னின் சடலம் கிடப்பதாக களக்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றினர்.
பின்னர் உடற்கூறு ஆய்வுக்காக சடலத்தை நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
சடலமாக கிடந்தது 70 வயது மதிக்கத்தக்க பெண் ஆவார். கால்வாயில் குளிக்க வந்த போது நீரில் மூழ்கி உயிரிழந்தாரா? அல்லது தவறி விழுந்து பலியானாரா? என்பது தெரியவில்லை.
அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது போன்ற விபரங்களும் தெரியவில்லை.
இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சடலமாக கிடந்த மூதாட்டியை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.