இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்திய போது எடுத்தபடம். 
உள்ளூர் செய்திகள்

களக்காட்டில் வனத்துறையை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

களக்காட்டில் வனத்துறையை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

களக்காடு:

களக்காட்டில் அட்டகாசம் செய்துவரும் வனவிலங்குகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் அலட்சிய போக்கை கடை பிடிப்பதாக புகார் கூறி வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் களக்காட்டில் ஆர்பாட்டம் நடந்தது.

விவசாய தொழிற்சங்க மாவட்ட தலைவர் பாலன் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் ஜவஹர் முன்னிலை வகித்தார்.

 இதில் மாவட்ட இந்திய கம்யூ செயலாளர் காசி விஸ்வநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணன், ஒன்றிய பொறுப்பாளர் முருகன், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்ட தலைவர் சுகுமார், லெனின் முருகானந்தம், அப்பாத்துரை, கோசிமின் மற்றும் விவசாயிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அவர்கள் வனத்துறையை கண்டித்தும், அட்டகாசம் செய்துவரும் வனவிலங்குகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரியும், வனவிலங்குகள் நாசம் செய்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.

SCROLL FOR NEXT