பஸ் நிறுத்தங்கள் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றபோது எடுத்த படம். 
உள்ளூர் செய்திகள்

இட்டமொழி பகுதிகளில் பஸ் நிறுத்தங்கள் கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா

இட்டமொழி பகுதியில் பஸ் நிறுத்தங்கள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா யூனியன் தலைவர் சவுமியா தலைமையில் நடைபெற்றது.

மாலை மலர்

நெல்லை:

நாங்குநேரி யூனியனுக்கு உட்பட்ட பகுதிகளில் யூனியன் தலைவர் சவுமியா ஆரோக்கிய எட்வின் முயற்சியால் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு ஏராளமான வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இட்டமொழி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமங்களில் பஸ் நிறுத்தங்கள் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு  யூனியன் தலைவர் சவுமியா ஆரோக்கிய எட்வின் தலைமை தாங்கினார். அவர் இட்டமொழி பஞ்சாயத்துக்குட்பட்ட இட்டமொழி, புதூர் ஆகிய இடங்களில் தலா ரூ.8 லட்சம் மதிப்பில்  கட்டப்பட உள்ள பஸ் நிறுத்தங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து செண்பகராமன் நல்லூரில் கட்டப்பட உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு அடிக்கல் நாட்டினார்.

 நிகழ்ச்சியில் நாங்குநேரி ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் ஆரோக்கிய எட்வின், சுடலை கண்ணு, ஒன்றிய கவுன்சிலர் பிரேமா, எபனேசர், பஞ்சாயத்து தலைவர் சுமதி, துணைத்தலைவர் அலெக்சாண்டர் மற்றும் நிர்வாகிகள் இம்மானுவேல், சண்முகம் ராஜா, தியாகராஜன், சுந்தர், அரசு முருகன், அந்தோணி,  செல்வகுமார், லிங்கேசன், தம்பிதுரை, ராமலிங்கம்,சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.