கோப்புபடம். 
உள்ளூர் செய்திகள்

பால்காரருக்கு அரிவாள் வெட்டு

மேலப்பாட்டத்தில் கண்ணன் என்ற பால்காரரை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டினர்.

நெல்லை:

பாளை மேலப்பாட்டத்தை சேர்ந்தவர் கண்ணன் என்ற ராமகிருஷ்ணன் (வயது 25). பால்வியாபாரி. நேற்று மாலை வியாபாரத்தை முடித்துவிட்டு கண்ணன் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

 அவர் மேலப்பாட்டம் சாலையில் சென்ற போது பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரை திடீரென வழிமறித்து தாக்கினர். பின்னர் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுவிட்டனர். 

இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை அரிவாளால் வெட்டியவர்கள் யார்? எதற்காக அவரை வெட்டினர்? முன்விரோதம் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்றனர்.