கோப்புபடம். 
உள்ளூர் செய்திகள்

விவசாயி கொலையில் மேலும் ஒருவர் கைது

பாளை விவசாயி முத்துமாலை கொலை வழக்கில் முருகன் என்பவரை போலீசர் கைது செய்தனர்.

நெல்லை:

பாளை அருகே உள்ள நடுவக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் முத்துமாலை (வயது 40). விவசாயி.

நேற்று முத்துமாலை அப்பகுதியில் உள்ள ரேஷன் கடை முன்பு நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அவரது உறவினர்கள் குஞ்சு முருகன் (28), திருத்து பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் (45) ஆகியோர் முத்துமாலையை சரமாரியாக குத்திக் கொலை செய்தனர்.

பின்னர் அவர்கள் பாளை தாலுகா போலீசில் சரணடைந்தனர். இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.  விசாரணையில் முத்துமாலையும், குஞ்சு முருகனும் உறவினர்கள். 

இவர்களது பழைய சொத்தில் உள்ள விவசாய நிலம் யாருக்கு சொந்தமானது என்பது தொடர்பாக 2 குடும்பத்தாருக்கும் பிரச்சனை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. 

இந்த நிலையில் நேற்று அவரிடம் மீண்டும் நிலம் தொடர்பாக பேசிக் கொண்டிருந்த போது தகராறு முற்றவே முத்துமாலையை கொலை செய்ததாக கூறினர். 

இந்த கொலை சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது அவரையும் போலீசார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT