நெல்லை:
தமிழகத்தில் சொத்துவரி உயர்த்தப்பட்டதை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் மாவட்ட தலைநககரங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் அமைப்பு செயலாளர் சுதாபரமசிவம், கொள்கை பரப்பு செயலாளர் பாப்புலர் முத்தையா, முன்னாள் எம்.பி. முத்துக்கருப்பன், மாவட்ட பொருளாளர் சவுந்தர்ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ரெட்டியார்பட்டி நாராயணன், ஆர்.பி.ஆதித்தன்,
மாநகராட்சி கவுன்சிலர் ஜெகநாதன் என்ற கணேசன், மாவட்ட அவைத் தலைவர் பரணிசங்கரலிங்கம், முன்னாள் அமைப்பு செயலாளர் நாராயண பெருமாள், எம்.ஜி.ஆர். மன்ற மாநில இணைச்செயலாளர் கல்லூர் வேலாயுதம், மாவட்ட பேரவை செயலாளர் ஜெரால்டு, எம்.ஜி.ஆர்.மன்ற மாவட்ட செயலாளர் பெரியபெருமாள், பகுதி செயலாளர்கள் சிந்துமுருகன், ஜெனி, நிர்வாகிகள் பால்கண்ணன், மகபூப்ஜான், திசையன்விளை பேரூராட்சி தலைவர் ஜான்சிராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.