முயல் வேட்டையாடிய 3 பேர் 
உள்ளூர் செய்திகள்

முயல் வேட்டையாடிய 3 பேர் கைது

பணகுடி அருகே உள்ள சிவகாமிபுரம் வனப்பகுதியில் வேட்டை நாய்களை வைத்து முயல் வேட்டையில் ஈடுபட்ட 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

பணகுடி மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான சிவகாமிபுரம் வனப்பகுதியில்  பூதப்பாண்டி வனச்சரக எல்லை பகுதிகளில் சிலர் வேட்டை நாய்களை வைத்து முயல் வேட்டையில் ஈடுபடுவதாக வனச்சரக அலுவலர் திலீபனுக்கு ரகசிய தகவல்  கிடைத்தது.

 அதன் அடிப்படையில்  பூதப்பாண்டி வனப்பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு சந்தேகம் ஏற்படும்படியாக வேட்டை நாய்களுடன் 3 பேர் இருந்தனர்.  

அவர்களிடம் விசாரணை செய்ததில் தென்காசி அருகே  கடையாலுருட்டி பகுதியை சேர்ந்த கண்ணன், மாரிஸ்குமார், சபரி ராஜா  என்பதும், அவர்கள் முயல் வேட்டையாடியதும் தெரியவந்தது.

அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்த போது 2 முயல்களை வேட்டையாடியது தெரியவந்தது.

இதையடுத்து வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்படி  கைது செய்து, 3 பேருக்கும் தலா ரூ.5 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.15 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டது.