நெல்லை:
பாளை பெருமாள்புரம் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்-தவர் சண்முகம். இவரது மகன் ஹரிகரன் (வயது23). இவர் படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
நேற்று இரவு ஹரிகரனும், அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் சுகுமாரும் திருமால் நகருக்கு சென்று அங்குள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தியதாக கூறப்படுகிறது.
அதன் பின்னர் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் ஹரிகரன் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு சாப்பிட்டு விட்டு 2 பேரும் சாந்தி நகர் 4-வது குறுக்குத்-தெருவில் உள்ள மற்றொரு நண்பர் வீட்டுக்கு சென்றுள்ளனர்.
அங்கு சென்ற சிறிது நேரத்தில் ஹரிகரனை அவரது நண்பர்கள் நெல்லை அரசு ஆஸ்பத்-திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்-ளனர். அப்போது அவரது உடலில் காயங்கள் இருந்தது.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஹரிகரன் உடலில் காயம் இருந்ததால் அவரது நண்பர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹரிகரன் மதுபோதையில் சாந்திநகர் நண்பர் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு சக நண்பர்களுடன் சேர்ந்து மீண்டும் மது குடித்ததாக தெரிகிறது. அங்குள்ள மொட்டை மாடியில் நின்று அனைவரும் பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களுக்குள் ஏதேனும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டு, அதன் காரணமாக ஹரிகரனை மொட்டை மாடியில் இருந்து நண்பர்கள் கீழே தள்ளி விட்டார்களா? அல்லது மதுபோதையில் ஹரிகரன் மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக சம்பவம் நடந்த வீட்டுக்கு சென்று போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.