கோப்புப்படம் 
உள்ளூர் செய்திகள்

அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் சாவு

பாளையங்கோட்டை மத்திய சிறை அருகே அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலியானார்.

மாலை மலர்

நெல்லை:

பாளை அருகே உள்ள கீழநத்தம் தங்கம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 27).

இவர் நேற்று இரவு பாளை புதிய பஸ் நிலையம் அருகே தனது நண்பரை பார்த்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.

பாளை ஜெயில் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக அவர் சாலையில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் ரமேஷ் மீது ஏறி இறங்கியது.

இதில் படுகாயம் அடைந்த அவரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை இறந்தார்.

விபத்து குறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.