நெல்லை:
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பதட்டமான வாக்குச் சாவடிகளுக்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நெல்லை மாநகர பகுதியில் மட்டும் 129 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குச் சாவடிகள் என கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் பாது காப்பு போடப் பட்டுள்ளது.
இது தவிர நெல்லை புற நகர் பகுதியில் 60 வாக்கு சாவடிகள் பதட்டமான வாக்குச் சாவடிகள் என்று கண்டறியப்பட்டு அங்கும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 169 வாக்குச்சாவடிகளிலும், தென்காசி மாவட்டத்தில் 146 வாக்குச்சாவடிகளும் பதட்ட மான வாக்குச் சாவடிகள் என கண்டறி யப்பட்டு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டு உள்ளது.
மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் நுண் பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அங்கு நடைபெறும் தேர்தல் சி.சி.டி.வி. காமிரா மூலம் பதிவு செய்யப்பட்டு, இணைய தளம் மூலமும் ஒளிபரப்பப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.