போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் பரிசு வழங்கிய காட்சி. 
உள்ளூர் செய்திகள்

அகில உலக அய்யாவழி சேவை அமைப்பின் முப்பெரும் விழா - ரெட்டியார்பட்டி நாராயணன் பங்கேற்பு

அகில உலக அய்யாவழி சேவை அமைப்பின் முப்பெரும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் ரெட்டியார்பட்டி நாராயணன் பங்கேற்றார்.

மாலை மலர்

நெல்லை:

குமரி மாவட்டம் உடையப்பன் குடியிருப்பில் அகில உலக அய்யாவழி சேவை அமைப்பின் முப்பெரும் விழா  நடந்தது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அன்ன தர்மத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பாடசாலை மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் அய்யாவழி சுரேஷ், முத்தூர் ஊராட்சி கழக செயலாளர் முத்தூர் நைனார், பாளை ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் மாயா ரகுராம், தருவை   கிளை செயலாளர் செல்லத்துரை மற்றும் அய்யாவழி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.