நெல்லை:
மேலப்பாளையத்தை சேர்ந்த ஒரு டாக்டர் குடும்பத்தினர் கார் மூலம் நாகர்கோவில் சென்றனர். அந்த காரில் 5 வயது குழந்தை, இளம்பெண் உள்ளிட்ட வர்கள் அமர்ந்திருந்தனர்.
கார் நெல்லை அரசு என்ஜினீயர் கல்லூரியில் பகுதியில் சென்று கொண்டு இருந்த போது திடீரென காரின் முன்பக்க டயர் வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதனை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக விரைந்து சென்று காரை நிறுத்தி அதில் இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர்.
விபத்தில் காரில் இருந்தவர்கள் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.