உள்ளூர் செய்திகள்

திண்டிவனம்: பட்டாசு வெடித்ததில் கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது

திண்டிவனத்தில் பட்டாசு வெடித்ததில் தீற்ெபாறி விழுந்து கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது.இவரது வீடு திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கிடங்கல் 2 ராஜன் தெருவை சேர்ந்தவர் அஞ்சலி தேவி. இவர் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர். இவரது வீடு திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. உடனடியாக அருகே இருந்தவர்கள் தீயை அணைக்கப் போராடினர். இது குறித்து தகவலறிந்த திண்டிவனம் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இது குறித்து திண்டிவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் தீபாவளிக்கு சிறுவர்கள் பட்டாசு வெடித்த போது அதிலிருந்து தீப்பொறி கூரை வீட்டில் பற்றி எரிந்திருக்கலாம் என தெரியவந்தது.

SCROLL FOR NEXT