கோப்புப்படம் 
உள்ளூர் செய்திகள்

பா.ஜனதா தலைவர் அண்ணாமலை நாளை தூத்துக்குடி, நெல்லையில் பிரசாரம்

பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நாளை தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் பிரசாரம் செய்கிறார்.

மாலை மலர்

நெல்லை:

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்குவதை யொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது பிரசாரத்தை தொடங்கி உள்ளனர்.

தேர்தல் நடைபெற உள்ள மாநகராட்சிகளுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தங்களது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகின்றனர்.

இந்நிலையில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று முதல் பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.

நாளை நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அவர் பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்.

நாளை காலை நாகர்கோவிலில் பிரசாரத்தை முடித்து விட்டு மதியம் திருச்செந்தூர் நகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர் களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

அதன் பின்னர் மாலை 4 மணிக்கு தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியிலும், மாலை 6 மணிக்கு நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும் அண்ணாமலை பிரசாரம் செய்கிறார்.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப் பிடித்து ஆங்காங்கே அரங்க கூட்டம், வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் பொதுக்கூட்டங்களில் அவர் கலந்து கொள்கிறார்.

தொடர்ந்து மறுநாள் (புதன்கிழமை) காலை 10 மணிக்கு கோவில்பட்டி நகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். அதன் பின்னர் மதுரைக்கு செல்கிறார்.