யுகாதி வருடப்பிறப்பு சிறப்பு பூஜை நடைபெற்ற போது எடுத்தபடம். 
உள்ளூர் செய்திகள்

பூமாதேவி ஆலயத்தில் யுகாதி வருடப்பிறப்பு சிறப்பு பூஜை

கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் உள்ள பூமாதேவி ஆலயத்தில் யுகாதி வருடப்பிறப்பு சிறப்பு பூஜை நடைபெற்றது.

மாலை மலர்

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் உள்ள பூமாதேவி ஆலயத்தில் யுகாதி வருடப்பிறப்பு சிறப்பு பூஜை நடைபெற்றது.

 விழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருவனந்தல் திருப்பள்ளியெழுச்சி மற்றும் காலை பூஜையும், 6 மணிக்கு மேல் அம்பாள் குரு சுப்பிரமணிய சுவாமிக்கும் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் மஞ்சள் மாபொடி திரவியம் பால், தேன் மற்றும் சந்தனம் போன்ற திரவியங்களால் சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது.

பின்னர் அம்பாளுக்கு பூஜை செய்ய சோடனை தீபாராதனைகள் நடைபெற்றது. பூஜைகளை லட்சுமணன் சுவாமி தலைமையில் ஆலய அர்ச்சகர் செல்வசுப்பிரமணியன் செய்தார்.

சுப்பாராஜ் சங்கரேஸ்வரி மாரியப்பன் ஆறுமுகம் மாரீஸ்வரன் கதிர்காம சுப்பிரமணியன் திருவிளக்கு பூஜை குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.