சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழையில் மதுவை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்கப் படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தட்டார்மடம் சப்-இன்ஸ்பெக்டர் பென்சன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.
அப்போது பெரியதாழை கல்லறை தோட்டம் அருகில் மதுவை பதுக்கி வைத்திருந்ததாக பெரியதாழை பகுதியை சேர்ந்த எல்ஜியூஸ் (வயது 45) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 25 மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.