சாத்தான்குளம் பள்ளியில் இல்லம் தேடி கல்வி குறித்து தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்ட போது எடுத்தப்படம். 
உள்ளூர் செய்திகள்

இல்லம் தேடி கல்வி குறித்து தன்னார்வலர்களுக்கு பயிற்சி

சாத்தான்குளம் பள்ளியில் இல்லம் தேடி கல்வி குறித்து தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் டி.என்.டி.டி.ஏ. தூய ஸ்தேவான தொடக்கப் பள்ளியில் இல்லம் தேடி கல்வி தன்னார் வலர்களுக்கு பயிற்சி  முகாம் நடைபெற்றது. ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வட்டார மேற்பார்வையாளர் ஜான்சன் ஜெபக்குமார் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார்.

 தன்னார்வலர்களுக்கு இல்லம் தேடிக் கல்வி ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் அன்பாய் செல்வம், சப்திகா, ஆசிரியர் பயிற்றுநர்கள் ரஞ்சித், சாரா ஆகியோர் பயிற்சி அளித்தனர். பின்னர் தன்னார்வலர்கள் தயாரித்த கற்பித்தல் உபகரணங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தது. 

இதனை சுற்று வட்டார  பள்ளி மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர். இதில்  சாத்தான்குளம் ஒன்றியத்தில் பணிபுரியும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். தூய ஸ்தேவான்  தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை வேதராணி நன்றி கூறினார்.