சாத்தான்குளம்:
தமிழகம் முழுவதும் வருகிற 27-ந்தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுகிறது.
இதையொட்டி சாத்தான்குளம் அருகே உள்ள சாலைபுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து கொடுக்க கூடிய பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
ஆழ்வார்திருநகரி செவிலியர் தங்கமாரி தலைமை தாங்கி, செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தன்னார்வலர்களுக்கு 5 வயது வரையுள்ள குழந்தைகளை கண்டறிந்து போலியோ சொட்டு கொடுப்பது குறித்தும், அதற்கான நடவடிக்கைகள் குறித்தும் சிறப்பு பயிற்சி அளித்தார்.
இதில் சுகாதார ஆய்வாளர் ஜேசுராஜ், மகேஷ்குமார் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
27-ந்தேதி சாலைபுதூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குட்பட்ட 23 இடங்களில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
இதுதொடர்பான துண்டு பிரசுரம் விநியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் முடிவு செய்யப்பட்டது.