பறிமுதல் செய்யப்பட்ட புகையிலையுடன் கைதான வியாபாரி. 
உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் புகையிலை விற்ற வியாபாரி கைது

தூத்துக்குடி அருகே உள்ள புதூர் பகுதியில் பெட்டிக்கடையில் பதுக்கி வைத்திருந்த புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து, வியாபாரியை கைது செய்தனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, மதுபாட்டில்கள், புகையிலைப் பொருட்கள் விற்பவர்கள் உட்பட சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவர்கள் குறித்து தீவிர ரோந்துப்பணியை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

அவரது உத்தரவின் பேரில் புதூர்  சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் தலைமையில் போலீசார் நேற்று புதூர் வ.உ.சி. தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

அப்போது, அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீனிவாசன் (53),  என்பவர் தனது பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது.

உடனடியாக போலீசார் சீனிவாசனை கைது செய்து அவரிடமிருந்து 1,283 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். 

இதுகுறித்து புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.