கோப்புப்படம் 
உள்ளூர் செய்திகள்

குலசேகரன்பட்டினம் அரசு ஆஸ்பத்திரியை புதுப்பிக்க கோரிக்கை

குலசேகரன்பட்டினம் அரசு ஆஸ்பத்திரியை புதுப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு நுகர்வோர் பேரவை சார்பில் திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. கோகிலாவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர்:

தமிழ்நாடு நுகர்வோர் பேரவை மாநில தலைவர் மோகனசுந்தரம் குலசேகரன்பட்டணம் அரசு மருத்துவமனையை புதுப்பிக்கக் கோரி திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. கோகிலாவிடம் மனு கொடுத்துள்ளார். 

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

ஆறுமுகநேரி பேரூராட்சி எதிர்புறம் குப்பைகளை அகற்ற வேண்டும். பொதுமக்கள் நலன் கருதி திருச்செந்தூர் பந்தல் மண்டபம் பகுதியில் போக்குவரத்தை தடை செய்ய வேண்டும். 

திருச்செந்தூர், காயல்பட்டணம், உடன்குடி, குலசேகரபட்டினம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்து ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT