கோப்புப்படம் 
உள்ளூர் செய்திகள்

தென்திருப்பேரை பேரூராட்சியை கைப்பற்ற போவது யார்?

தென்திருப்பேரை பேரூராட்சியை கைப்பற்ற போவது யார் என்று இழுபறி நீடித்து வருகிறது.

மாலை மலர்

தென்திருப்பேரை:

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தென்திருப்பேரை பேரூராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. 

இதில் 1-வது வார்டு வேட்பாளரை எதிர்த்து போட்டி இல்லாததால் 1-வது வார்டு வேட்பாளர் கீதா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

மீதமுள்ள 11 வார்டுகளுக்கான தேர்தல் நடந்தது. அதில் தி.மு.க. வேட்பாளர்கள் 6 பேர் வெற்றி பெற்றுள்ளனர். 

அதில் 7-வது வார்டு மற்றும் 8-வது வார்டில் வெற்றி பெற்ற ஆனந்த், மணிமேகலை இருவரும் கணவன் மனைவி ஆவார்கள். 

அ.தி.மு.க. 2 இடங்களிலும் பாஜக 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். சுயேட்சை வேட்பாளர்கள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். 

இந்த சூழ்நிலையில் 12 வார்டுகள் உள்ள தென்திருப்பேரை பேரூராட்சியில் ஆட்சியமைப்பது யார் என்ற இழுபறி நிலைமை ஏற்பட்டுள்ளது.