தூத்துக்குடி-எட்டயபுரம் சாலையில் தேங்கியுள்ள மணல்களை அகற்றும் பணியை கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார். 
உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியை விபத்தில்லா மாவட்டமாக மாற்றிட பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்-கலெக்டர் செந்தில்ராஜ் வேண்டுகோள்

தூத்துக்குடியை விபத்தில்லா மாவட்டமாக மாற்றிட பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கலெக்டர் செந்தில்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாலை மலர்

தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

அக்கூட்டத்தில் ஆர்.டி.ஓ.க்கள், தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், போக்குவரத்து மற்றும் காவல் துறை அலுவலர்கள் ஆகியோருடன் ஒவ்வொரு பகுதிகளிலும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளவைகள்,

அதிக விபத்துகள் ஏற்படும் பகுதிகள், குறுகலான சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்கள் உள்ளிட்டவைகள் குறித்து கலந்தாய்வு செய்யப்படுகிறது.

 பின்னர் அவற்றுக்கான தீர்வை ஏற்படுத்தும் வகையில் எந்தெந்த இடங்களில் விபத்துகள் நடக்கிறதோ அந்த இடங்களில் சென்று காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்து துறை அதிகாரிகள் இணைந்து சென்று எவ்வாறு மேம்படுத்தலாம் என்று ஆய்வு செய்கின்றனர்.
 
தூத்துக்குடி - திருச்செந்தூர் ரோடு முள்ளக்காடு ஊராட்சி பகுதிக்குட்பட்ட பொட்டல்காடு சந்திப்பில் ரவுண்டானா சிக்னல் அமைக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது.

தூத்துக்குடி - திருச்செந்தூர் - ஹார்பர் ரோடு முத்தையாபுரம் சந்திப்பிலும் அதிக அளவு சாலை விபத்துகள் ஏற்படுகிறது. எனவே இப்பகுதியிலும் ரவுண்டானா சிக்னல் அமைக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் சாலைகளில் மணல் அதிகமாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். அதை அகற்றுவதற்கு பணிகள் எடுத்துள்ளோம்.

சாலைகளில் இருக்கும் மணலை அகற்றுவதற்கு தமிழக அரசு நெடுஞ்சாலைத்துறைக்கு தமிழகத்தில் உள்ள 6 மாநகராட்சிகளுக்கு தலா ரூ. 60 லட்சம் மதிப்பிலான மெக்கானிக்கல் பூமர் வாகனத்தினை வழங்கியுள்ளது. இந்த 6 மாநகராட்சிகளில் தூத்துக்குடி மாநகராட்சியும் ஒன்று.

பொதுமக்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகம் மற்றும் போக்குவரத்து துறையினர் மேற்கொள்ளும் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து விபத்து இல்லா தூத்துக்குடி மாவட்டமாக மாற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

 இவ்வாறு அவர் கூறினார்.