வழிபாடு நடைபெற்ற காட்சி. 
உள்ளூர் செய்திகள்

ஆறுமுகநேரி கோவிலில் சிறப்பு வழிபாடு

ஆறுமுகநேரி அருகே சாகுபுரம் டி.சி.டபிள்யூ. நிறுவன குடியிருப்பு வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மங்கல விநாயகர் ஆலயத்தில் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி அருகே சாகுபுரம் டி.சி.டபிள்யூ. நிறுவன குடியிருப்பு வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மங்கல விநாயகர் ஆலயத்தில் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 

டி.சி.டபிள்யூ. நிறுவனத்தின் மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன் ஏற்பாட்டில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஆறுமுகநேரி ஸ்ரீ சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவிலின் திருமறை பண்ணிசைக் குழுவினர் காலை முதல் மதியம் வரை திருவாசகம் ஓதி வழிபாடு செய்தனர். 

இதனைத் தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. இதில் டி.சி.டபிள்யூ. நிறுவன செயல் உதவி தலைவர் சீனிவாசன், அவரது துணைவியார் சாரதா நந்தினி அம்மாள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT