டி.சி.டபிள்யூ. நிறுவன மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன் அரசு சுகாதாரத்துறை டாக்டருக்கு சான்றிதழ் வழங்கிய போது 
உள்ளூர் செய்திகள்

டி.சி.டபிள்யூ. நிறுவனம் சார்பில் அரசு டாக்டர்களுக்கு வெள்ளி பதக்கம்

டி.சி.டபிள்யூ. நிறுவனத்தின் சார்பில் குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.நிறுவனத்தின் மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன் கொரோனா காலத்தில் சிறப்பாக சேவை புரிந்த அரசு டாக்டர்களுக்கு வெள்ளி பதக்கம் வழங்கினார்.

மாலை மலர்

ஆறுமுகநேரி:

சாகுபுரம் டி.சி.டபிள்யூ. நிறுவனத்தின் சார்பில் குடியரசு தின விழா சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.நிறுவனத்தின் மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன் தேசிய கொடி ஏற்றி சிறப்புரை ஆற்றினார்.

இந்நிகழ்ச்சிக்கு நிறுவனத்தின் உதவித் தலைவர் சுரேஷ் முன்னிலை வகித்தார். விழாவின்போது கொரோனா காலத்தில் சிறப்பாக சேவை புரிந்த ஆறுமுகநேரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சீனிவாசன், டாக்டர் சுமதி, காயாமொழி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் அகல்யா, ஆறுமுகநேரி சுகாதார ஆய்வாளர் மகாராஜன் ஆகியோரை பாராட்டி அவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் வெள்ளி பதக்கங்கள் வழங்கப்பட்டன.

மேலும் அவசர காலத்தில் சிறப்பாக பணிபுரிந்த டி.சி.டபிள்யூ. நிறுவனத்தின் தொழிலாளர்கள், அலுவலர் களுக்கும் சான்றிதழ்கள் மற்றும் வெள்ளிப் பதக்கங் களை சீனிவாசன் வழங்கினார்.

விழாவில் நிறுவனத்தின் பொது மேலாளர்கள், மேலாளர்கள், பாதுகாப்பு துறை அலுவலர்கள் உள்பட பலர்  கலந்து கொண்டனர்.