கோப்புப்படம் 
உள்ளூர் செய்திகள்

சாத்தான்குளம் அரசு மகளிர் கல்லூரிக்கு இலவச பஸ் வசதி செய்ய கோரிக்கை

சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு இலவச பஸ் வசதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இட்டமொழி செல்லும் சாலையில் உள்ளது. நகரிலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. 

இந்த கல்லூரியில் தற்போது சாத்தான்குளம், திசையன்விளை, உடன்குடி மற்றும் மணிநகர், தட்டார்மடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் மாணவிகள் படித்து வருகின்றனர். 

கல்லூரிக்குச் சென்று வர பஸ் வசதி சரிவர இல்லை. மாணவிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். பலதடவை மாணவிகள் காலை மாலை வேளைகளில் நடந்தே கல்லூரிக்கு சென்று வருகின்றனர். 

எனவே மாணவிகள் நலன் கருதி கல்லூரியில் இலவச பேருந்து வசதி செய்யவேண்டுமென சாத்தான்குளம் வர்த்தக சங்க செயலாளர் செல்வராஜ் மதுரம் அரசு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.  அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சாத்தான்குளம் சுற்றுப்புற பகுதியில் உள்ள ஒரே அரசு கல்லூரி இது தான். சரியான போக்குவரத்து வசதி இல்லாததால் மாணவிகள் கல்லூரிக்கு சென்று வீடு திரும்ப சிரமப்பட்டு வருகின்றனர். பலதடவை மாணவிகள் நடந்தே செல்லும் பரிதாப நிலை உள்ளது. 

எனவே போக்குவரத்து வசதி செய்திட மாணவிகள் நலன் கருதி சாத்தான்குளம் அரசு மகளிர் கல்லூரிக்கு மகளிர் இலவச பேருந்து வசதி செய்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார். 

மேலும் ஏழை, எளிய மாணவிகள் படித்து பயன் பெரும் வகையில் இக்கல்லூரி அமைந்துள்ளதால் மாணவிகள் பயன்பெறும் வகையில் உடனடியாக கல்லூரிக்கு இலவச பேருந்து வசதி செய்திட அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி நகர ம.தி.மு.க. சார்பிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.