பிரதோஷ வழிபாடு நடைபெற்ற போது எடுத்தப்படம். 
உள்ளூர் செய்திகள்

அழகிய கூத்தர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரிமங்கலம் அழகிய கூத்தர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சாத்தான்குளம்:

சாத்தான்குளம்  அருகே உள்ள  கட்டாரிமங்கலம் அழகிய கூத்தர் கோவிலில்  பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு  நேற்று மாலை  நடைபெற்றது-.

இதையொட்டி   அழகிய கூத்தர், சிவகாமி அம்மாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார  தீபாராதனை நடைபெற்றது.

இதையொட்டி வளாகத்தில் அமைந்துள்ள நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜை, தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் நந்தியம் பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் செய்திருந்தனர்.