கயத்தாறு:
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வளர்ந்து வரும் நகரமாகும். இங்கு உள்ள பஸ் நிலையத்திற்கு பெரும்பாலான பஸ்கள் வருவதில்லை.
அவை நான்கு வழிச்சாலையில் நெல்லையை நோக்கி சென்றுவிடுகிறது என பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். பின்னர் அவர்களின் கோரிக்¬கைய ஏற்று கயத்தாறு ஊருக்குள் பஸ்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை 6 மணி முதல் 8 மணி வரை பஸ்கள் வரவில்லை. இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் பணிகளுக்கு செல்லும் பயணிகள்2 மணி நேரம் காத்திருந்தனர்.
அதன்பின்னர் வந்த ஒரு பஸ்சில் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்தனர். அதேநேரத்தில் வயதானவர்கள் மற்றும் மாணவிகள் பஸ் சில் ஏற முடியாமல் வீடு திரும் பினர். சுமார் 2 மணி நேரம் காத்திருந்தும் பஸ்சில் அவர்களால் ஏற முடியவில்லை.
இந்த நிலையை போக்க எம்.பி., அமைச்சர்கள், போக்குவரத்து அதிகாரிகள் ஆகியோரிடம் தகவல் கொடுத்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை. கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் நல சங்கத்தினர் கூறுகின்றனர்.