ஊட்டச்சத்து வார விழாவில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம். 
உள்ளூர் செய்திகள்

ஊட்டச்சத்து வார விழா

கயத்தாறு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் மகளிர் திட்ட அலுவலகத்தில் இருவார ஊட்டச்சத்து விழா நடைபெற்றது.

கயத்தாறு:

கயத்தாறு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் மகளிர் திட்ட அலுவலகத்தில் இருவார ஊட்டச்சத்து விழா நடைபெற்றது. குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தாஜுன்னிசா பேகம் தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக மருத்துவர் சாய்நரேந்திரன் மற்றும் சுகாதாரத்துறை ஆய்வாளர் விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். ஊட்டச்சத்துள்ள உணவு, குழந்தைகளின் வளர்ச்சி கண்காணிப்பு, சுத்தம் மற்றும் சுகாதாரம் பற்றிய கருத்துகள் தாய்மார்களுக்கு விழாவில் எடுத்துரைக்கப்பட்டது.

விழாவில் 3 முதல் 5 வயது குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துள்ள உணவு தயாரிக்கும் சமையல் போட்டி தாய்மார்களுக்கு நடைபெற்றது. இதில் 30-க்கும் மேற்பட்ட தாய்மார்கள் கலந்து கொண்டனர்.இணை உணவில் தயாரிக்கப்பட்ட கேக் முதல் பரிசு பெற்றது.

முதல் பரிசு மாதா கோவில் தெரு சரண்யாவிற்கும், இரண்டாவது பரிசு கயத்தாறு மேற்கு சங்கீதாவிற்கும், மூன்றாவது பரிசுராஜாபுதுக்குடி மாலதிக்கும் வழங்கப்பட்டது. ஆறுதல் பரிசு வடக்கு இலந்தைகுளம் பார்வதி மற்றும் முஸ்லிம் தெரு பாத்திமுத்து ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

 விழாவில் மேற்பார்வையாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர். ராதாலட்சுமி நன்றி கூறினார்.