வாய்க்காலில் மிதந்த ஆண் பிணத்தை படத்தில் காணலாம். 
உள்ளூர் செய்திகள்

ஆறுமுகநேரி அருகே வாய்க்காலில் மிதந்த ஆண் பிணம்

ஆறுமுகநேரி அருகே உள்ள வாய்க்காலில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மிதந்தது.

மாலை மலர்

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி அருகே உள்ள சாகுபுரம் தனியார் பள்ளிக்கு எதிரே தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலை ஓரத்தில் வடிகால் வாய்க்கால் உள்ளது. 

இங்கு இன்று காலை ஆண் பிணம் ஒன்று அழுகிய நிலையில் மிதப்பது தெரியவந்தது. 

தகவல் அறிந்த ஆறுமுகநேரி போலீசார் அங்கு விரைந்து வந்து அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இறந்த நபர் யார் என்று அடையாளம் தெரியவில்லை. 

அவருக்கு சுமார் 55 வயது இருக்கும் என்று தெரிகிறது. 

அவர் யார்? எப்படி இறந்தார்? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.