கோவில்பட்டி:
கோவில்பட்டியில் பிரசித்தி பெற்ற செண்பக-வல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி திருக்கோவிலில் பங்குனி பெருந்திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாளை வரை தொடர்ந்து 11 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை 8 மணி, இரவு 7 மணிக்கும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, திரு வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சியளித்தனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டகபடிதாரர்கள் சார்பில் விழாக்கள் நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக 9-ம் திருநாளான நேற்று காலை 9 மணிக்கு கம்மவார் சங்கம் சார்பில் தேரோட்டம் நடைபெற்றது. அதை தொடர்ந்து 9-ம் திருநாள் மண்டகப்படி வணிக வைசிய சங்கம் மண்டகபடிதாரர் சார்பில் நடைபெற்றது. மெயின் ரோட்டில் உள்ள வணிகவைசிய சங்கத்திற்கு பாத்தியப்பட்ட 9-ம் திருநாள் மண்டபத்தில் சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது.
அதை தொடர்ந்து இரவு 10 மணிக்கு யானை முன் செல்ல வானவேடிக்கைகள் முழங்க யானை மற்றும் அன்னவாகனத்தில் சுவாமி - அம்பாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.
இதில் வணிக வைசிய சங்க தலைவர் வெஙகடேஷ், செயலாளர் வேல்முருகன், பொருளாளர் தங்கமாரியப்பன், சங்க துணை செயலாளர் மணிமாறன், குன்னிமலைராஜா, கருப்பசாமி, மாதவராஜ், சுப்பிரமணியன் ஆசிரியர் நினைவு பள்ளி நிர்வாகி மகாலிங்கம், நகர்மன்ற உறுப்பினர் பரமசிவம், சிவாநந்தம், முன்னாள் தலைவர் காளியப்பன், முன்னாள் செயலாளர் பழனிக்குமார், செல்லம், மாரிக்கண்ணன், நம்பிராஜ், முனியசெல்வம் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
10-ம் திருநாளான இன்று மாலை 6 மணிக்கு ஆயிர வைசிய காசுக்கார செட்டி பிள்ளைகள் சங்கம் சார்பில் தீர்த்தவாரி தீபாராதனை நடக்கிறது. இரவு 12 மணிக்கு ரிஷப வானத்தில் சுவாமி - அம்பாள் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
11-ம் திருநாளான நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு கோவில்பட்டி நாடார் உறவின் முறை சங்கம் சார்பில் வானவேடிக்கைகள் முழங்க மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி அம்பாள் எழுந்தருளி தெப்ப திருவிழா நடைபெறவுள்ளது.