கயத்தாறு தெற்கு தெருவில் உள்ள மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது. 
உள்ளூர் செய்திகள்

கயத்தாறு மாரியம்மன் கோவிலில் கொடை விழா

கயத்தாறு தெற்கு தெருவில் உள்ள மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது.

கயத்தாறு:

கயத்தாறு தெற்கு தெருவில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 8 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

அன்று முதல் தினமும் காலை மற்றும் மாலையில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. நேற்று மதியம் கொடை விழாவும், மாலை 6 மணிக்கு சூரையாடல், கலை நிகழ்ச்சிகள், இரவு பொங்கலிடுதல், முடிகாணிக்கை, காது குத்துதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இரவு 12 மணிக்கு சாமக்கொடை, அதிகாலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர் முளைப்பாரி ஊர்வலம், பால்குடம் எடுத்து தெருக்கள் வழியாக, ஊர்வலமாக வந்தனர்.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழா கமிட்டியினர் செய்து  இருந்தனர்.