தென்திருப்பேரை:
அரியானாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மனித உரிமைகள் இன்டர்நேஷனல் பெடரேஷனின் தென்மண்டல மனித உரிமைகள் இன்டர்நேஷனல் பெடரேசனின் ஆலோசனை கூட்டம் தென்திருப்பேரையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தென்மண்டல தலைவர் ஆரோக்கியபழம் தலைமை தாங்கினார்.
தென்னிந்திய மனித உரிமைகள் இன்டர்நேசனல் பெடரேசன் இயக்குனர் அலுபினிஸ் பிரேம்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கூறியதாவது:-
காவல்துறை, அரசுத்துறை, மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் அவர்களோடு இணைந்து பொதுமக்களுக்கு மனித உரிமை மீறல் எந்த சூழலில் ஏற்பட்டாலும் அவர்களுக்கு உதவி செய்வதே இந்த அமைப்பின் நோக்கமாகும். இந்த அமைப்பானது தேசிய மனித உரிமை ஆணையத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது என கூறினார்.
நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட தலைவர் சைலஸ் ஸ்டீபன், நெல்லை, தென்காசி புறநகர் மாவட்ட தலைவர் சேது சுப்பிரமணி யன், தூத்துக்குடி மாவட்ட பொது மக்கள் தொடர்பு அலுவலர் கர்ணன், கன்னியாகுமரி மாவட்ட தலைவர் ஜுஜிகர் கிருஷ்ணகுமார் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.