ஆறுமுகநேரி:
திருச்செந்தூர் கரம்ப விளையில் குடும்பத்துடன் வசித்து வருபவர் முனியசெல்வம் (வயது 37).
இவர் தனது இருசக்கர வாகனத்தில் மீன் வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று காயல்பட்டினம் கொம்புத்துறையில் மீன் விற்க சென்றபோது அந்தப் பகுதியை சேர்ந்த ஸ்டீபன் ராஜ் (24) என்பவர் வேகமாக ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் முனிய செல்வம் மீது மோதியது.
இதில் கீழே விழுந்த அவருக்கு முகத்திலும், காலிலும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் திருச்செந்தூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இந்த விபத்து குறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.