கோப்புபடம். 
உள்ளூர் செய்திகள்

பா.ஜனதா பிரமுகருக்கு கொலை மிரட்டல்

காயல்பட்டினத்தை சேர்ந்த பா.ஜனதா பிரமுகர் பண்டாரம் என்பவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

ஆறுமுகநேரி:

காயல்பட்டினம் வாணியகுடி தெருவை சேர்ந்தவர் பண்டாரம் (வயது 54). 

சைக்கிள் கடை நடத்தி வரும் இவர் பாரதிய ஜனதா கட்சியின் காயல்பட்டினம் நகர தலைவராகவும் உள்ளார். 

இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகன்களான மகேஷ், பாலமுருகன் ஆகிய இருவரும் சம்பவத்தன்று ஆட்டோவில் தெரு வழியாக சென்றுள்ளனர்.அப்போது அருணாச்சலம் என்பவரது வீட்டின் தகர செட் பகுதியை ஆட்டோ இடித்து சேதப்படுத்தியுள்ளது. 

இதனை பண்டாரம் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதன் பின்னர் மகேஷ், பாலமுருகன் ஆகிய இருவரும் பண்டாரம் வீட்டிற்குள் நுழைந்து வாக்குவாதம் செய்துள்ளனர். மேலும் பண்டாரத்தை அவதூறாக பேசி கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். 

இதுகுறித்து பண்டாரம் ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். 

அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் நாராயணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.