தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களில் அதிக அளவில் பொதுமக்கள் கூடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று முக கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு தலா ரூ. 200 அபராதமும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கு தலா ரூ. 500 அபராதமும் விதிக்கப்படுகிறது.
மாவட்டத்தில் நேற்று தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறி பொது இடங்களில் முககவசம் அணியாத 330 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அதன்படி தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 62 பேர் மீதும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் 46 பேர் மீதும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 33 பேர் மீதும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 19 பேர் மீதும், மணியாச்சி உட்கோட்டத்தில் 26 பேர் மீதும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 104 பேர் மீதும், விளாத்திகுளம் உட்கோட்டத் தில் 6 பேர் மீதும், சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 34 பேர் மீதும் என மொத்தம் 330 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.66,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் திருச்செந்தூர் உட்கோட்டத்தில் சமூக இடைவெளி கடைப்பிடிக்காத ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.