செய்துங்கநல்லூர்:
ஸ்ரீவைகுண்டம் குமர குருபர சுவாமிகள் தொடக்கப்பள்ளி மாணவ-&மாணவிகள் கல்வி சுற்றுலாவாக கன்னியாகுமரி மற்றும் முட்டம் பகுதிகளுக்கு சென்றனர்.
பழமை வாய்ந்த குமரகுருபர சுவாமிகள் தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகள் கல்விச் சுற்றுலாவிற்கான போக்குவரத்திற்கு உதவிட வேண்டுமென பள்ளி தலைமை ஆசிரியை ராணி, ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ.விடம் கேட்டுக்கொண்டார்.
உடனடியாக தனது சொந்த நிதியிலிருந்து மாணவ&மாணவிகள் கல்வி சுற்றுலாசென்று வருவதற்கான உதவிகளை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. செய்தார்.
இதனை அடுத்து குமரகுருபர சுவாமிகள் தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி சுற்றுலாவாக கன்னியாகுமரி மற்றும் முட்டம் பகுதிகளுக்கு புறப்பட்டு சென்றனர்.