உடன்குடி பகுதியில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ள முருங்கைக்காய். 
உள்ளூர் செய்திகள்

உடன்குடி வட்டார பகுதியில் முருங்கைக்காய் கிலோ ரூ.5 ஆக குறைந்தது

உடன்குடி வட்டார பகுதியில் தற்போது முருங்கை விவசாயம் தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது முருங்கைக்காய் விலை கிலோ ரூ.5 ஆக குறைந்தது.

மாலை மலர்

உடன்குடி:

உடன்குடி வட்டார பகுதியில் தற்போது முருங்கை விவசாயம் தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து விட்டு விட்டு சாரல்மழை பெய்ததால் முருங்கைக்காய் எல்லாம் கொஞ்சம்பழுப்பு நிறம் கலந்த கருப்பு நிறமாக மாறிவிட்டது. 

இதனால் இந்த முருங்கைக்காய்களை வெளி ஊர்களுக்கு ஏற்றுமதி செய்வது நிறுத்தப்பட்டது. உடன்குடி பகுதியில் உள்ள கமிஷன் கடையில் ஒரு கிலோ ரூ.7-க்கு கொள்முதல் செய்த முருங்கைக்காய் தற்போது மேலும் விலை குறைந்து ஒரு கிலோ ரூ.5-க்கு மட்டுமே கொள்முதல் செய்கின்றனர்.

 இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்து உள்ளனர். இதை யாரும் வாங்குவதும் இல்லை. வெளியூருக்கு அனுப்பவும் முடியவில்லை. அதனால் ஆங்காங்கே கமிஷன் கடைகளில் முருங்கைக்காய் தேங்கி கிடக்கிறது.